இன்றைய நிகழ்ச்சிகள்/ நவ.16க்குரியது
கோயில்
திருக்கார்த்திகை உற்ஸவ வீதி உலா: மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அம்மனும், சுவாமியும் பஞ்சமூர்த்திகளுடன் ஆடி வீதியில் உலா, காலை 7:00 மணி, மாலை 6:00 மணி
மண்டாலபிஷேகம்: சித்தி விநாயகர் கோயில், எஸ்.எஸ். காலனி, மதுரை, மாலை 6:00 மணி
தாமோதர தீபத் திருவிழா: இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயில், மணிநகரம், மதுரை, ஏற்பாடு: இஸ்கான் அமைப்பு, மாலை 6:30 மணி.
கூட்டுப் பிரார்த்தனை: நிகழ்த்துபவர்: ஹரிதாஸ், நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, ஏற்பாடு: தெய்வீக உலக அமைப்பு ஜவானி, மாலை 6:00 மணி.
பொன்விழா ஆண்டு சிறப்பு 50 மணி நேர ஆராதனை: இடைவிடா சகாய அன்னை சர்ச், அஞ்சல் நகர், மதுரை, இரவு 10:00 மணி முதல்.
பக்தி சொற்பொழிவு
தாயுமானவர்: நிகழ்த்துபவர் - சுந்தர கண்ணன், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு மதுரைத் திருவள்ளுவர் கழகம், மாலை 7:00 மணி.
பகவத் கீதை சம்பூர்ண பாராயணம்: நிகழ்த்துபவர் - வேதாந்த சிரவணானந்த ஆசிரமத்தினர், காமராஜர் ரோடு, மதுரை, ஏற்பாடு: வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், காலை 10:30 மணி.
பொது
தி.மு.க., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: திருப்பரங்குன்றம், மதுரை, தலைமை: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணி, முன்னிலை: புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., ஏற்பாடு: அ.தி.மு.க., புறநகர் கிழக்கு மாவட்டம், காலை 10:00 மணி.
அ.தி.மு.க., 53வது ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம்: ஓபுளா படித்துறை, மதுரை, பங்கேற்பு: நகர் செயலாளர் செல்லுார் ராஜூ எம்.எல்.ஏ., அமைப்பு செயலாளர் துரை செந்தில், மகளிரணி துணைச்செயலாளர் நடிகை காயத்ரி ரகுராம், மாலை 6:00 மணி.
மதுரை மாவட்ட நீதித்துறை பணி நிறைவுற்றோர் சங்க பொதுக்குழுக்கூட்டம்: எல்.ஐ.சி., ஊழியர் சங்க கட்டடம், அண்ணா பஸ் ஸ்டாண்ட், மதுரை, தலைமை: தலைவர் கோபால், சிறப்புரை: ஓய்வு பெற்ற நீதிபதிகள் உதயன், பாண்டுரெங்கன், தட்சிணாமூர்த்தி, காலை 10:00 மணி.
மதுரை மரங்கள் - நுால் திறனாய்வு: அர்பன் ஸ்பைஸ், கே.கே. நகர், மதுரை, பங்கேற்பு: நுாலாசிரியர் கார்த்திகேயன், ஸ்லீப் ஓவர்ஸ் நுால் திறனாய்வு: பேசுபவர் - கர்மிலிட்டா பிரான்சிஸ், ஏற்பாடு: புக் கில்டு ஆப் மதுரை, மாலை 5:30 மணி.
பள்ளி, கல்லுாரி
காந்தி ஜெயந்தி சொற்பொழிவு: வெள்ளைச்சாமி நாடார் கல்வியியல் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் தேன்மொழி, அறிமுக உரை: காந்தி மியூசிய ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், நிகழ்த்துபவர்: உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நேர்முக உதவியாளர் ராஜபிரபா, காலை 10:00 மணி.
மருத்துவம்
இலவச கண் பரிசோதனை முகாம்: ஏ.எம்.எம். துவக்கப்பள்ளி, அலங்காநல்லுார். ஏற்பாடு: குறிஞ்சி வட்டார களஞ்சியம், அரவிந்த் கண் மருத்துவமனை, காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.
விளையாட்டு
வாலிபால் போட்டி: லதா மாதவன் கல்லுாரி, கிடாரிபட்டி, தலைமை: லதா மாதவன் கல்வி நிறுவனர் மாதவன், சிறப்பு விருந்தினர்: அமைச்சர் மூர்த்தி, காலை 7:00 மணி.
கண்காட்சி
ஹஸ்தகலா சார்பில் கைவினை, வீட்டு அலங்காரப் பொருட்கள், துணிகள், நகைகள் கண்காட்சி விற்பனை: ஜே.சி. ரெசிடென்சி, சின்ன சொக்கிகுளம், மதுரை, காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.