வேலைவாய்ப்பு முகாம் 27 பேருக்கு ஆணை
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் நடந்த தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்ற பொறியாளர்கள் 27 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து பி.இ., - பி.டெக்., படித்த பட்டதாரிகளுக்கு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
முகாமிற்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் முரளிதரன் தலைமை தாங்கினார். தமிழகத்தில் உள்ள பொறியியல் துறையைச் சார்ந்த 15 முன்னணி நிறுவனங்கள் பணியிடங்களை நிரப்பினர்.
முகாமில் மாவட்டம் முழுவதிலுமிருந்து 168 பேர் பங்கேற்றதில் 27 பேர் தேர்வு செய்யப்பட்டு பணியாணை வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement