ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் கலெக்டர் ஆய்வு செய்ய கோரிக்கை
திருக்கோவிலுார் : மணம்பூண்டியில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் நெடுஞ்சாலைத் துறையினர் பாரபட்சமான முறையில் நடந்து கொண்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அரகண்டநல்லுார் அடுத்த மணம்பூண்டி, துரிஞ்சலாற்று பாலத்தில் இருந்து நான்கு முனை சந்திப்பு, புறவழிச் சாலைகளில் கடந்த 13ம் தேதி நெடுஞ்சாலைத்துறை, ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை மேற்கொண்டது.
போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள பல கடைகள் அகற்றவில்லை. பாதிப்பிலாத பல வீடுகளை நெடுஞ்சாலை துறையினர் இடித்துவிட்டு சென்றதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் இந்த பாரபட்சமான நடவடிக்கையை கலெக்டர் நேரடியாக ஆய்வு செய்து, நேர்மையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement