சட்டவிரோத மது விற்பனை 15 தாபாக்களுக்கு சீல் வைப்பு

அன்னுார்; கோவை புறநகரில், சட்டவிரோத மது விற்பனை செய்த, ரெஸ்டாரன்ட்கள் உள்ளிட்ட 15 தாபாக்களுக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.

கோவை புறநகரில், அன்னுார், கோவில்பாளையம், கருமத்தம்பட்டி பகுதியில், குடில் ஓட்டல் என்று அழைக்கப்படும் சில தாபா மற்றும் ரெஸ்டாரன்ட்களில் மது விற்பனை நடந்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மேட்டுப்பாளையம் மற்றும் கருமத்தம்பட்டி டி.எஸ்.பி.,க்கள் தலைமையில், மெகா ரெய்டு நடத்தப்பட்டது.

இதில், ரெஸ்டாரன்ட் மற்றும் தாபாக்களில் இருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து, கோவை கலெக்டர் கிராந்தி குமார், மது விற்பனையில் ஈடுபட்ட, 3 ரெஸ்டாரன்ட் மற்றும் 12 தாபாக்களுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். அன்னுார் தாசில்தார் குமரி ஆனந்தன், துணை தாசில்தார் தெய்வ பாண்டியம்மாள், போலீஸ் எஸ்.ஐ., கோபிநாத் மற்றும் அதிகாரிகள் சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அன்னுார் அருகே சட்டவிரோதமாக மது விற்ற குருக்கிளையம்பாளையம் தென்றல் ரெஸ்டாரன்ட், கரியாம்பாளையம் சக்திவேல் ரெஸ்டாரன்ட், கெம்பநாயக்கன் பாளையம் ஆரோக்கியா பேமிலி ரெஸ்டாரண்ட் ஆகிய மூன்றுக்கும் சீல் வைக்கப்பட்டது. இது தவிர கோவில்பாளையத்தில் 4, கருமத்தம்பட்டியில் 2, சூலுாரில் 6 தாபாக்களுக்கும் சீல் வைக்கப்பட்டது.

Advertisement