மாநில வில்வித்தை போட்டி தேனி  வீராங்கனை முதலிடம்

தேனி : தேனி அரண்மனைப்புதுார் முல்லை நகர் வெங்கட்டபுருஷோத்தமன்.- நலினகாந்தி தம்பதி. இவர்களின் மகள் விகாசினிதேவி 22. இவர் சி.எம்.ஏ., (காஸ்ட் மேனேஜ்மென்ட் அக்கவுண்டண்ட்) படித்து வருகிறார்.

இவர் 2021ல் சிவகாசியில் நடந்த மாநில 10 மீ., வில்வித்தை போட்டியில் பங்கேற்று முதலிடம் பெற்றார். மேலும் தேனி வில்வித்தை பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றார். இந்நிலையில் துாத்துக்குடி மாவட்டம், டார்கெட் வில்வித்தை கூட்டமைப்பு மற்றும் போக்கஸ் ஸ்போர்ட்ஸ் இண்டியா, கோவில்பட்டி போக்கஸ் வில்வித்தை அகாடமி சார்பில்,தமிழ்நாடு பள்ளிகளுக்கு இடையிலான ஓப்பன் ஆர்ச்சரி சேம்பியன்ஷிப் போட்டி நவ.10ல் நடந்தது. இதில் விகாசினிதேவி பங்கேற்று பொது பிரிவுக்கான 10 மீ., போட்டியில் முதலிடமும், 20 வயதிற்கு மேற்பட்டோர் போட்டியில் 20 மீ., பிரிவிலும் முதலிடம் பெற்று சாதனை படைத்தார். இவரை பெற்றோர், தேனி வில்வித்தை பயிற்சியாளர் அன்பழகன், உறவினர் முத்துசுப்ரமணியம் பாராட்டினர்.

Advertisement