மாநில தட்டு, குண்டு எறிதல் போட்டியில் கம்பம் மாணவர் தங்கம் வென்று சாதனை

கம்பம் : ஈரோட்டில் நடந்த குடியரசு தின மாநில தடகள போட்டிகளில் தட்டு,குண்டு எறிதல் போட்டிகளில் கம்பம் எம்.பி.எம். மேல்நிலைப்பள்ளி மாணவர் தங்கப் பதக்கம் வென்று, தட்டு எறிதலில் 21 ஆண்டு கால சாதனை முறியடிக்கப்பட்டது.

ஈரோட்டில் 2024 -2025க்கான குடியரசு தின தடகள போட்டிகள் பள்ளிகளுக்கு இடையே 2 வாரங்களுக்கு முன் நடந்தது.

இதில் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கம்பம் எம்.பி.எம். மேல்நிலைப்பள்ளியில் 9 ம் வகுப்பு படிக்கும் தாரனேஷ், தட்டு எறிதல்,குண்டு எறிதலில் முதலிடம் பெற்று தங்க பதக்கத்தை தட்டி சென்றார். தட்டு எறிதலில் 2003ல் 47.49 மீட்டர் எறிந்த சாதனை இதுவரை முறியடிக்காமல் இருந்தது. தற்போது நடந்த போட்டியில் தாரனேஷ் 48.70 மீட்டர் எறிந்து 21 ஆண்டு சாதனையை முறியடித்துள்ளார் என பள்ளி செயலர் மகுடகாந்தன் கூறியுள்ளார்.

மாணவரை பள்ளி நிர்வாக குழு தலைவர் ரத்தினமாலா, செயலர் மகுடகாந்தன், தலைமையாசிரியர் கென்னடி, உதவி தலைமையாசிரியர் மாவூற்றுவன், உடற்கல்வி ஆசிரியர்கள் ரமேஷ், பிரதீப் ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

Advertisement