இந்தியா என்று அழைத்தால் அரசியல் இருக்கிறது: கவர்னர் ரவி

12


சென்னை: 'இந்தியா என்று அழைத்தால் அரசியல் இருக்கிறது. பாரதம் என்றால் ஜாதி, மதம் இல்லாத தார்மீக தர்ம நாடு என்று பொருள்' என தமிழக கவர்னர் ரவி தெரிவித்தார்.

சென்னை, கிண்டி ராஜ்பவனில் மொழிகள் தொடர்பாக, 2 நாட்கள் கருத்தரங்கு நடக்கிறது. இன்று துவக்க விழாவில் கவர்னர் ரவி பேசியதாவது: பாரதம் என்றால் ஜாதி, மதம் இல்லாத தார்மீக தர்ம நாடு என்று பொருள். பாரதம் என்பது தர்மத்தால் உருவானது. பாரத் என்பது இந்தியாவை விட வேறுபட்டது. ஐரோப்பியர்களே இந்தியா என அழைத்தனர். அப்படி அழைப்பதில் அரசியல் இருக்கிறது. எல்லா மொழி இந்திய இலக்கியங்களும் ஒற்றுமையை வலியுறுத்துகின்றன.

பாரத்



செப்பு மொழி பதினெட்டு உடையாள் என நாட்டின் ஒற்றுமையை பாரதி வலியுறுத்தி உள்ளார். இந்திய இலக்கியங்களில் எப்படி ஒற்றுமையுடன் வாழலாம் என காட்டப்பட்டுள்ளன. இந்தியா என்பதை பாரத் என்று அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது. ஆனால் அதனை விளக்கவில்லை. இதனை குழந்தைகளுக்கு விளக்க வேண்டியது நம் கடமை. நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்பதே பாரதம். இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.

Advertisement