வடிகால் முறையாக கட்டாததால் வீட்டிற்குள் புகுந்த மழைநீர்
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் முறையாக கட்டாததால் வீட்டில் தண்ணீர் புகுந்தது.
நெல்லிக்குப்பம் நகர பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடந்தது. அப்போது சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் கட்டினர். வாய்க்காலை தொடர்ச்சியாக கட்டாமல் ராமு தெரு உட்பட பல இடங்களில் இணைக்காமல் விட்டனர். இதனால் நேற்று காலை பெய்த மழையால், ராமு தெரு, கந்தசாமி தெரு உட்பட பல தெருக்களில் தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கி நின்றது. மருத்துவமனைக்கு சென்ற நோயாளிகள் சிரமம் அடைந்தனர். மேலும், நகராட்சி மூலம் திரு.வி.க.தெருவில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் முறையாக இல்லாததால் அப்பாதுரை என்பவரது வீட்டினுள் தண்ணீர் புகுந்தது.
அதிகாரிகள் அலட்சியத்தால், நெல்லிக்குப்பம் பகுதியில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement