வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணி குறித்த ஆலோசனை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளரான பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல ஆணையர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார்.

கலெக்டர் பிரசாந்த் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வரும் 2025 ஜனவரி 1ம் தேதியை தகுதியேற்பு நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணி வரும் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இம்முகாம்களில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி முகவர்கள் ஓட்டுச் சாவடிக்குச் சென்று ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களிடமிருந்து பெறும் படிவங்கள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும்.

ஏற்கனவே வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர்பட்டியலில் வாக்காளர் பெயர் சேர்க்காமல் விடுபட்டிருந்தால் உரிய ஆவணங்களுடன் படிவம் வழங்கி வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர் பெயர் சேர்க்க வேண்டும்.

18 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டி யலில் பெயர் சேர்க்க வேண்டும். அதற்காக கல்லுாரிகளில் அதிக அளவிலான முகாம்கள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி, இளம் வாக்காளர்களை சேர்க்க வேண்டும் என அரசியல் கட்சியினருக்கு வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் வெங்கடேஷ் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, உளுந்துார் பேட்டை, பிடாகம், தியாகதுருகம் அரசு பள்ளிகளில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் சிறப்பு சுருக்க திருத்த முகாம் அன்று அனை வரும் ஆஜராகி இளம் வாக்காளர்களிடம் பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பம் பெற வேண்டும். நவம்பர் 16, 17 மற்றும் 23, 24 தேதிகளில் நடக்கும் முகாம்களில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

பின், கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், சங்கராபுரம் சட்டசபை தொகுதியின் வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் இணையதளத்தில் படிவங்கள் சேர்த்தல், நீக்கல், திருத்தம் முடிவு செய்ததை ஆய்வு செய்தார்.

டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், திருக்கோவிலுார் சார் ஆனந்த்குமார் சிங், கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., லுார்துசாமி, வட்டாட்சியர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், தேர்தல் பணி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Advertisement