விழுப்புரத்தில் கூட்டுறவு வார விழா ரூ.18.49 கோடி அரசு உதவி வழங்கல்
விழுப்புரம்: விழுப்புரத்தில் கூட்டுறவு வார விழா நடந்தது.
கரும்பு விவசாயிகள் திருமண மண்டபத்தில் நடந்த விழாவிற்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் பெரியசாமி வரவேற்றார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் சொர்ணலட்சுமி திட்ட விளக்கவுரையாற்றினார்.
வனத்துறை அமைச்சர் பொன்முடி சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம், 2,620 பயனாளிகளுக்கு, 18 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி, சிறப்புரையாற்றினார்.
விழாவிற்கு, எம்.எல்.ஏ.,க்கள் மஸ்தான், டாக்டர் லட்சுமணன், அன்னியூர் சிவா, மணிக்கண்ணன், சிவக்குமார், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணைச் சேர்மன் ஷீலாதேவி சேரன், நகர மன்ற துணைத் தலைவர் சித்திக் அலி, ஆவின் பொதுமேலாளர் ரமேஷ், கூட்டுறவுத்துறை துணை பதிவாளர்கள் சரண்யா, சமரசம், கண்ணன், ராகினி, சார் பதிவாளர்கள் சந்திரசேகர், ராஜரத்தினம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
விழுப்புரம் துணை பதிவாளர் சிவபழனி நன்றி கூறினார்.