நீதித்துறை பணி நிறைவுற்றோர் சங்க பொதுக்குழுக்கூட்டம்
மதுரை: மதுரையில் நடந்த தமிழ்நாடு நீதித்துறை பணி நிறைவுற்றோர் சங்க பொதுக்குழு கூட்டத்திற்கு தலைவர் கோபால் தலைமை வகித்தார். செயலாளர் பாஸ்கரன் வரவேற்றார்.
பொருளாளர் பாண்டியராஜ் நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தார். ஓய்வுபெற்ற நீதித்துறை தலைமை நிர்வாக அதிகாரி ராதாகிருஷ்ணன் எழுதிய 'தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை' எனும் ஆங்கில நுாலை ஓய்வு நீதிபதி உதயன் வெளியிட்டார்.
70 வயது அடைந்த ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்குதல், ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகுப்பு நிலுவை தொகையை 15 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக குறைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைச் செயலாளர் பாஸ்கர் நன்றி கூறினார்.
முன்னாள் மாநில செயலாளர் ராமசாமி, ஓய்வுபெற்ற நீதிபதிகள் பாண்டுரங்கன், தட்சிணாமூர்த்தி, அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் கிருஷ்ணன், நீதித்துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராஜேஷ், மாநில துணைத் தலைவர் குருசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.