கார்த்திகை மாதம் பிறப்பு ஐயப்பன் பக்தர்களுக்கு மாலை
விழுப்புரம்: கார்த்திகை மாத பிறப்பையொட்டி ஐயப்பன் பக்தர்கள் மாலை அணிந்தனர்.
சபரிமலையில் உள்ள ஐயப்பன் சுவாமியை தரிசனம் செய்வதற்கு, ஆண்டுதோறும் பக்தர்கள் கார்த்திகை மாதம் மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலைக்கு செல்கின்றனர்.
நேற்று கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி பக்தர்கள் மாலை அணிந்து, விரதத்தை துவக்கினர்.
விழுப்புரம் நேருஜி சாலை வீரவாழியம்மன் கோவில், பூந்தோட்டம் முத்துமாரியம்மன் கோவில், பூ மார்க்கெட் தெரு சக்தி விநாயகர் கோவில், மருதுார் மாரியம்மன் கோவில், ரயிலடி விநாயகர், ரங்கநாதன் ரோடு சித்தி விநாயகர், காமராஜர் தெரு அமராபதி விநாயகர், பெருமாள் கோவில் தெரு கோட்டை விநாயகர், மேல்தெரு மாரியம்மன், கீழ்ப்பெரும்பாக்கம் திரவுபதியம்மன், சபரிகிரீசன் கோவில்கள் உள்ளிட்ட பக்தர்கள் நேற்று மாலை அணிந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement