மகனை காப்பாற்றிய தந்தை கொலை

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி தெற்குதெரு கக்கன்ஜி காலனியைச் சேர்ந்தவர் முருகன் 60. இவரது மகன் மாரிமுத்துவை 30.

சுடுகாட்டு பகுதியில் இதே தெருவைச் சேர்ந்த சந்தனக்குமார், ராஜ்குமார், கரண், விஜயகுமார் ஆகியோர் தகராறில் அடித்துள்ளனர்.

இந்த விபரம் அறிந்த முருகன், தகராறு செய்தவர்களை எச்சரித்து மாரிமுத்துவை மீட்டு வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

சிறிது நேரம் கழித்து சுடுகாட்டு பகுதியில் டீ குடிக்க முருகன் சென்றார்.

மகனிடம் தகராறு செய்த சந்தனக்குமார் உட்பட 4 பேர் முருகனிடம் தகராறு செய்து கையால் அடித்து தள்ளிவிட்டனர். கீழே விழுந்த முருகன் இறந்தார். தேவதானப்பட்டி போலீசார் சந்தனக்குமார் உட்பட 4 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.-

Advertisement