விஜய் கட்சி கொள்கை பா.ம.க.,வுடையது
நடிகர் விஜயும் புதிதாக கட்சித் துவங்கி இருக்கிறார். அரசியலில் நுழைந்து யார் வேண்டுமானாலும் கட்சித் துவங்கலாம்; தவறில்லை. அது தான் ஜனநாயகமும் கூட. கட்சித் துவங்கி இருக்கும் நடிகர் விஜய், தன்னுடைய கட்சிக் கொள்கைகளாக அறிவித்திருக்கும் விஷயங்களில், 90 சதவீதம் அளவுக்கு பா.ம.க.,வின் கொள்கைகளே இடம் பெற்றுள்ளன.
அப்படியென்றால், பா.ம.க.,வின் கொள்கைகளை, புதிதாக கட்சி துவங்குவோர் கூட புறக்கணிக்க முடியவில்லை. ஆனால், அந்த கொள்கைகளின் அடிப்படையில், நடிகர் விஜய் எப்படி செயல்படப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தமிழகத்தில் எல்லா விஷயங்களிலுமே திராவிட இயக்கங்கள் மோசமாகத்தான் நடந்திருக்கின்றன என்று சொல்ல முடியாது. பல விஷயங்களில், தமிழகத்துக்கான நன்மைகளையும் செய்திருக்கின்றன. அதனால், திராவிட இயக்கங்களை எல்லாவற்றுக்கும் குறை சொல்ல முடியவில்லை.
- கே.பாலு
செய்தி தொடர்பாளர், பா.ம.க.,