மாநில சாம்பியன்ஷிப் போட்டி

மதுரை: தமிழ்நாடு இளைஞர் விளையாட்டுக் கழகம் சார்பில் தமிழ்நாடு மாநில அளவிலான சாம்பியன்ஷிப் மதுரையில் நேற்று தொடங்கியது.

14 வயது ஆண்கள் பிரிவு கபடி இறுதிப்போட்டியில் கே.எம்.ஆர். சர்வதேச பள்ளி 36 - 27 புள்ளிகளில் திருநகர் எம்.எம். பள்ளியை வீழ்த்தியது. 17 வயது பிரிவு இறுதிப் போட்டியில் எம்.எம். பள்ளி 32 - 17 புள்ளிகளில் கே.எம்.ஆர். பள்ளியை வீழ்த்தியது. எறிபந்து இறுதி போட்டியில் கே.எம்.ஆர்., பள்ளி 21 - 7 புள்ளிகளில் டி.டி.சி., பள்ளியை வீழ்த்தியது.

பரிசளிப்பு விழாவின் போது போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் குறித்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்த்தப்பட்டது. சமூக ஆர்வலர் நாகராஜன் பரிசு வழங்கினார். உடற்கல்வி ஆசிரியர்கள் வைரமுத்து, சின்னசாமி, குமார் பாராட்டினர். விளையாட்டு கழக செயலாளர் அன்பரசன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Advertisement