சித்தோட்டில் நாட்டு சர்க்கரை மூட்டைக்கு ரூ.60 விலை சரிவு

ஈரோடு: ஈரோடு அடுத்த, சித்தோடு வெல்லம் சொசைட்டியில் நேற்று நடந்த ஏலத்தில், 30 கிலோ எடை கொண்ட, 2,200 மூட்டை நாட்டு சர்க்கரை வரத்தானது. ஒரு மூட்டை நாட்டு சர்க்கரை, 1,200 முதல், 1,320 ரூபாய் வரை விற்பனையானது. உருண்டை வெல்லம், 1,600 மூட்டைகள் வரத்தாகி ஒரு மூட்டை, 1,250 முதல், 1,380 ரூபாய் வரை விற்பனையானது.



அச்சு வெல்லம், 300 மூட்டைகள் வரத்தாகி ஒரு மூட்டை, 1,320 முதல், 1,370 ரூபாய் வரை விற்பனையானது.
கடந்த வாரத்தை ஒப்பிடுகையில், நாட்டு சர்க்கரை மற்றும் வெல்லம் ஆகியவை வரத்து குறைந்துள்ளது. அதேநேரம், நாட்டு சர்க்கரை மூட்டைக்கு, 60 ரூபாய், அச்சு வெல்லம் மூட்டைக்கு, 30 ரூபாய் விலை குறைந்துள்ளது. உருண்டை வெல்லத்தின் விலையில் மாற்றம் இல்லை.

Advertisement