பயிற்சியுடன் ட்ரோன் பைலட் உரிமம் அளிக்கிறது 'ஸ்ரீ ஈஸ்வர் ட்ரோன் டெக்'
கோவை: கோவையை சேர்ந்த ஸ்ரீ ஈஸ்வர் ட்ரோன் டெக் நிறுவனத்தில், விமான போக்குவரத்து துறையின் அங்கீகாரத்துடன், ட்ரோன் பைலட் உரிமம் பெறுவதற்கு ட்ரோன் மூலமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஐந்து நாள் ட்ரோன் பயிற்சியில் செயல்முறை விளக்கத்துடன், நான்கு மணி நேரம் சுயமாக ட்ரோன் இயக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சி பெறுபவர்களுக்கு விமான போக்குவரத்து துறையின் அங்கீகாரத்துடன், 10 ஆண்டுகளுக்கு பயன்படுத்தக்கூடிய ட்ரோன் பைலட் உரிமம் வழங்கப்படுகிறது. முன்பதிவு செய்பவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் பயிற்சி வழங்கப்படுகிறது.
ட்ரோன் பைலட் உரிமம் பெற்றவர்கள் விவசாயம், நில அளவீடு, புகைப்படத்துறை, கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவு, வனத்துறை, உயர்பிரிவு கட்டுமானம் போன்ற பல துறைகளில் வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு பயிற்சி முடித்த டிரோன் பைலட்டுகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா, இரண்டு (டி.என்.,) சி.டி.சி., என்.சி.சி., வளாகத்தில் நடந்தது. கர்னல் இமானுவேல் தமங் ஆபீசர் கமாண்டிங் சான்றிதழ்களை வழங்கினார். லெப்டினன்ட் மஹபூப் வேணுகோபால் மற்றும் முனைவர் சம்பத்குமார் பங்கேற்றனர்.