ரெகுநாதபுரம் சந்தைக்கு மேலுார் கரும்பு வரத்து
ரெகுநாதபுரம்: -ரெகுநாதபுரம் ஊராட்சியில் ஜூலை முதல் புதியதாக வாரச்சந்தை துவக்கப்பட்டு நடந்து வருகிறது.
சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயனடைகின்றனர். ஒவ்வொரு வாரம் சனிக்கிழமை தோறும் நடக்கும் சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் கடை அமைக்கின்றனர்.தற்போது மதுரை அருகே மேலுார் பகுதியில் விளைவிக்கப்பட்ட கரும்புகள் விற்பனைக்காக ரெகுநாதபுரம் சந்தைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மேலுார் கரும்பு வியாபாரி முனீஸ்வரன் கூறியதாவது:
ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதியில் நடக்கும் சந்தைகளில் கரும்பு லோடு வரத்து துவங்கியுள்ளது. ஒரு கரும்பு ரூ.50 முதல் 60 வரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது பெய்து வரும் மழையால் குறிப்பிட்ட அளவிற்கு விளைச்சல் அதிகரித்துள்ளது. பெரும்பாலும் கிணற்றுப் பாசனத்தை நம்பி கரும்பு விவசாயம் நடக்கிறது.
அதிக இனிப்புச் சுவை கொண்ட கரும்பை சந்தைக்கு வருவோர் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர் என்றார்.