தேர்வில் தோல்வியால் ஆத்திரம் 8 பேரை கொன்ற சீன இளைஞர்
பீஜிங்: சீனாவில், 'அரியர்' தேர்வில் தோல்வியடைந்த முன்னாள் மாணவர் ஆத்திரத்தில், தான் படித்த கல்லுாரிக்குள் நுழைந்து, அங்கிருந்தவர்களை சரமாரியாக கத்தியால் குத்தியதில் எட்டு பேர் உயிரிழந்தனர்; 17 பேர் காயமடைந்தனர்.
நம் அண்டை நாடான சீனாவின் ஜியாங்சு மாகாணம், யிசிங் நகரில் உள்ள தனியார் தொழிற்கல்லுாரியில் படித்த முன்னாள் மாணவர், அரியர் தேர்வில் தோல்வி அடைந்தார்.
இந்நிலையில், நேற்று கல்லுாரிக்கு வந்த, அந்த 21 வயது மாணவர், எதிரில்தென்பட்டவர்களை கண்மூடித்தனமாக கத்தியால் குத்தினார்.
இந்த தாக்குதலில் எட்டு பேர் உயிரிழந்தனர்;17 பேர் காயமடைந்தனர்.தாக்குதல் நடத்திய முன்னாள் மாணவரை போலீசார் கைது செய்துவிசாரித்து வருகின்றனர்.
காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
வாசகர் கருத்து (1)
அப்பாவி - ,
17 நவ,2024 - 06:05 Report Abuse
அடப்பாவமே... அங்கே அரியர் வெச்சவங்களுக்கு ஆல் பாஸ் போடக்கூடாதோ? திராவிட மாடல்ல செஞ்சாங்களே. அநியாயமா இத்தனை உயிர் பறிபோனதே?
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement