அடிக்கல் நாட்டு விழா

திருமங்கலம்: திருமங்கலம் நகராட்சியின் பழைய அலுவலக வளாகத்திற்குள் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடியே 51 லட்சம் மதிப்பீட்டில் 28 கடைகள் கொண்ட புதிய வணிக வளாகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

நகராட்சி தலைவர் ரம்யா தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஆதவன், கமிஷனர் அசோக்குமார் முன்னிலை வகித்தனர்.

நகராட்சி பொறியாளர் ரத்தினவேல், கவுன்சிலர்கள் சின்னச்சாமி, வீரக்குமார், சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர் மற்றும் கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement