மாணவியர் தங்கும் விடுதியில் ஆய்வு செய்த மூன்று பேர் யார்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி கோட்டை பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை மாணவியர் தங்கும் விடுதி உள்ளது.

இங்கு வைரக்கண்ணன், 55, சமையலராக உள்ளார். நேற்று முன்தினம், இவர் விடுதியில் இருந்து போது, அடையாளம் தெரியாத மூவர் வந்து, 'நாங்கள் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் இருந்து ஆய்வுக்கு வந்திருக்கிறோம்' என்று கூறி, விடுதியில் பல இடங்களில் ஆய்வு செய்து சென்றனர்.



இதுபற்றி விசாரித்த போது, வந்த மூவரும் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்பது உறுதியானது.


இதையடுத்து, மாவட்ட அலுவலர் ஸ்ரீதர் விசாரித்து, அடையாளம் தெரியாத மூன்று பேர் விடுதிக்குள் வந்தபோது, விடுதிக்காப்பாளர் நாகூர்முத்து விடுதியில் இல்லாததால், அவரை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Advertisement