4200 கிலோ பாலிதீன் பறிமுதல்
மேலுார்: மேலுார் நகராட்சி கமிஷனர் பாரத், பொறியாளர் முத்துக்குமார், சுகாதார ஆய்வாளர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் நேற்று மேலுார் பகுதி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் 4 ஆயிரத்து 60 கிலோ பாலிதீன் பை, கப் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. ஆய்வின் போது சுகாதார மேற்பார்வையாளர்கள் பாலசுப்பிரமணியன், மயில்வாகனன், சத்யா மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.
உசிலம்பட்டி: நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் சுகாதார பணியாளர்கள் சோதனை மேற்கொண்டனர். தேனி, பேரையூர் ரோடு, சந்தை பகுதிகளில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட பாலிதீன் பைகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். விசாரணையில் எஸ்.ஓ.ஆர்., நகரில் முகம்மது என்பவரது வீட்டில் மொத்த விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.
இரு நாட்களில் 200 கிலோவிற்கும் மேற்பட்ட பாலிதீன் பைகளை பறிமுதல் செய்ததுடன் ரூ.31 ஆயிரம் அபராதமும் விதித்தனர்.