தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுங்க! முதல்வருக்கு அரசு ஊழியர்கள் வலியுறுத்தல்

சேலம்: சேலத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட 2 நாள் மாநாடு நேற்று நிறைவு பெற்றது. மாவட்ட தலைவர் திருவே-ரங்கன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்றோர் சங்க மாநில துணைத்தலைவர் சுப்ரமணியன், மாநாட்டை தொடங்கி வைத்தார். மாநகராட்சி அம்மாபேட்டை மண்டல உதவி கமிஷனர் வேடியப்பன் பேசினார்.


மாநாட்டில், தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்கள் சம்-பந்தமாக தெரிவித்த வாக்குறுதிகள் அனைத்தையும், முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும்; அரசு அலுவலகங்களில் காலி பணியிடங்களை நிரப்புதல்; புது வேலை வாய்ப்புகளை உருவாக்-குதல்; அரசு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக கலெக்டர் அலுவலக பகுதியில் தொடங்கிய மாநாட்டு ஊர்வலம், ஒய்.எம்.சி.ஏ., வளாகத்தில் நிறைவடைந்தது. பின் மாவட்ட செயலராக சுரேஷ், தலைவராக திருவேரங்கன், பொருளாளராக சண்முகம் உள்பட, 13 நிர்வாகிகள் தேர்வு செய்-யப்பட்டனர். இதில் அரசு ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.

Advertisement