45 சதவீத வேட்டி; 20 சதவீத சேலை உற்பத்தி பணி நிறைவு பொங்கலின்போது முழு அளவில் வினியோகிப்பதில் சிக்கல்
ஈரோடு: பொங்கலுக்கான இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கு நுால் வரு-வதில் தாமதமான நிலையில் தற்போது, 45 சதவீத வேட்டி, 20 சத-வீத சேலைகள் மட்டுமே உற்பத்தியாகி உள்ளன. இதனால் வரும் பொங்கல் பண்டிகைக்கு முழு அளவில் இலவச வேட்டி, சேலை வினியோகம் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின்போது, ரேஷன் கார்டுதா-ரர்கள், அந்தியோதையா அன்ன யோஜனா திட்ட பயனாளிகள், விதவைகள், ஆதரவற்றோர் போன்றோருக்கு இலவச வேட்டி, சேலை ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும். இதற்காக, 1 கோடியே, 77 லட்சத்து, 22 ஆயிரத்து, 995 வேட்டிகள், 1 கோடியே, 77 லட்சத்து, 64 ஆயிரத்து, 471 சேலைகள் உற்பத்தி செய்ய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
வழக்கமாக ஜூலை மாதத்தில் நுால் டெண்டர் விடப்பட்டு, ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்துக்குள் நுால் வழங்கப்பட்டு, விசைத்தறிகளில் வேட்டி, சேலை பணி துவங்கும். இந்தாண்டு செப்., இறுதியில் வேட்டிக்கான நுால் வழங்க துவங்கினாலும், அக்., மாதம் முதலே சேலைக்கான நுால் வழங்கி வருகின்றனர். இதனால், உற்பத்தி மிகக்குறைந்த எண்-ணிக்கையிலேயே நிறைவு பெற்றுள்ளது.
இதுபற்றி, விசைத்தறி சங்கங்களின் நிர்வாகிகள் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் ஜூலையில் உற்பத்தியை துவங்கி, டிச., இறுதிக்குள் வேட்டி, சேலையை ஒப்படைத்து விடுவோம். கடந்த சில ஆண்டுகளாக, நுால் வழங்க தாமதமாவதால் வேட்டி, சேலை உற்பத்தியும் தாமதமாகிறது. நடப்பாண்டில் செப்., இறுதி முதல் வேட்டிக்கான நுாலும், அக்., முதல் சேலைக்கான நுாலும், பகுதி, பகுதியாக வழங்கி வருகின்றனர். இதனால், கூட்டுறவு சங்-கங்களின் கீழ் உள்ள விசைத்தறிகளில் முழு அளவில் உற்பத்தி பணியை செயல்படுத்த முடியாத நிலை உள்ளது.
நேற்றைய நிலையில், 45 சதவீத வேட்டி, 20 சதவீத சேலைகள் மட்டுமே உற்பத்தியாகி உள்ளன. பொங்கல் பண்டிகைக்கு, 60 நாட்கள் கூட இல்லாத நிலையில், வேட்டி, சேலையை முழுமை-யாக நிறைவு செய்வது சிரமம். ஒரு வேட்டி என்பது மூன்றே முக்கால் மீட்டர் நீளம், ஒரு சேலை என்பது, ஐந்தரை மீட்டர் நீளம் கொண்டது. இதன்படி ஜன., 15க்குள் வேட்டி உற்பத்தி பணி நிறைவடைய வாய்ப்புள்ளது. இருந்தும் தரம் உறுதி செய்து, பேக்கிங் செய்து, ரேஷன் கடை சென்று, பயனாளிகள் கைக்கு, 100 சதவீதம் கிடைப்பது சிரமம் தான். அதேநேரம், வேட்டி உற்-பத்தி பிப்., இறுதியில்தான் நிறைவு பெறும். எனவே, ஒரே நேரத்தில் ரேஷன் கடைகளில் வேட்டி, சேலை வழங்குவதில் சிக்கல் ஏற்படும்.
இவ்வாறு கூறினர்.