வாழைத்தார் வரத்து குறைந்தும் விலை கிடைக்கல... விவசாயிகள், வியாபாரிகள் கவலை
கரூர்: கரூரில் வாழைத்தார் வரத்து குறைந்ததும், போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள், வியாபாரிகள் கவலையடைந்துள்-ளனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனுார், திருச்சி மாவட்டம் காட்டு-புத்துார், கரூர் மாவட்ட த்தில் மாயனுார், லாலாப்பேட்டை, குளித்-தலை, வாங்கல், நெரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, வாழைத்தார், ரயில்வே ஸ்டேஷன் சாலை மார்கெட்டுக்கு விற்ப-னைக்கு கொண்டு வரப்படுகிறது. ஆனால் நேற்று, வாழைத்தார் வரத்து குறைந்த நிலையில், விலையும் அதிகரிக்கவில்லை. இதனால், விவசாயிகளும், வியாபாரிகளும் கவலையில் உள்ளனர்.
வாழை விவசாயிகளும், வாழைத்தார் வியாபாரிகளும் கூறியதா-வது: நடப்பு கார்த்திகை மாதத்தில், திருமணம் தவிர மற்ற பொது-வான, பண்டிகை இல்லை. மேலும், கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த காற்றுடன் கூடிய மழை காரணமாக, வாழைத்-தார்கள் சாய்ந்தது. இதனால், குறைந்தளவில்தான் வாழைத்தார்கள் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
கரூர் டவுன், வெங்கமேடு, பசுபதிபாளையம், தான்தோன்றிமலை, புலியூர், திருமாநிலையூர், செல்லாண்டிப்பாளையம், ராயனுார், காந்திகிராம், திருகாம்புலியூர், ஆண்டாங்கோவில், சுக்காலியூர், மண்மங்கலம், உள்ளிட்ட, பல்வேறு நகரப்பகுதிகளுக்கு, ரயில்வே ஸ்டேஷன் சாலை மார்கெட்டில் இருந்துதான், வாழைத்-தார்கள் ஏலத்துக்கு கொண்டு செல்லப்படும். ஆனால், பண்டிகை காலம் இல்லாததால் வாழைத்தார் ஏலம் எடுக்க சில்லரை வியா-பாரிகள் வரவில்லை. இதனால், வாழைத்தாருக்கு உரிய விலை கிடைக்கவில்லை.
கடந்த ஆயுத பூஜை, தீபாவளி நாட்களில், 800 ரூபாய் வரை ஏலம் போன பூவன் வாழைத்தார் தற்போது, 400 முதல், 600 வரையிலும், 700 ரூபாய்க்கு ஏலம் போன செவ்வாழை, 500 ரூபாய்க் கும், 600 ரூபாய்க்கு விற்ற ரஸ்தாளி, 400 ரூபாய்க்கும் ஏலம் போனது. வரும் டிச., 13 ல் கார்த்திகை தீப திருவிழா வரு-வதால், அப்போது வாழைத்தார்களுக்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.