டில்லி சட்டமன்ற தேர்தல்: 12 பேர் அடங்கிய பா.ஜ.,தேர்தல் குழு அமைப்பு
புதுடில்லி: டில்லியில் அடுத்த ஆண்டு(2025) துவக்கத்தில் நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, 12 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை குழுவை பா.ஜ., அமைத்தது.
டில்லி பா.ஜ., தலைவர் விரேந்திர சச்தேவா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
டில்லியின் தெற்கு பா.ஜ., தலைவர் ராம்விர் சிங் பிதுாரி தலைமையில், ஹர்ஷ்வர்தன், அர்விந்தர் சிங் லவ்லி, விஜய் கோயல், சதிஷ் உபியாய், மீனாக்ஷி லெகி, பரவேஷ் சஹிப் சிங், அஜய் மஹாவர், பிரவீன் ஷங்கர் கபூர், அபிஷேக் டான்டன், ராஜ்குமார் புல்வாரியா மற்றும் நீட்டு தபாஸ் ஆகிய 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பா.ஜ., உயர்மட்ட வட்டாரங்கள் கூறுகையில்,
வரவுள்ள சட்டமன்ற தேர்தல் அடித்தள வேலைகள் முழுமையடைந்து விட்டது. இம்மாத இறுதியில் சிறுசிறு பணிகளை முடிக்க எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டோம். களப்பணிகளை முழு அர்ப்பணிப்போடு நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறோம்.இப்பணிகள் குறித்து, டில்லி பா.ஜ., தலைவர் சச்தேவா, டில்லியில் உள்ள 7 எம்.பி.க்களுடனும் டில்லி பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பண்டா உடன் பேசப்பட்டுவிட்டது.
விரைவில் பா.ஜ.,உயர்மட்ட கூட்டம் நடைபெறும்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.