திருமூர்த்தி அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்த வெள்ளம்
திருப்பூர்: தொடர் கனமழை காரணமாக, திருமூர்த்தி மலையில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.
திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி மலையில் இன்று மாலை கன மழை பெய்தது. இதனால், தோணி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு இரவு சுமார் 8 மணியளவில் திருமூர்த்தி மலை அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் திருக்கோயிலை காட்டாற்று வெள்ளம் சூழ்ந்து சென்றது.
பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பக்தர்கள் யாரும் கோவில் அமைந்துள்ள பகுதிக்கு அனுமதிக்கப்படவில்லை.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement