ஒற்றை யானை தாக்கி தொழிலாளி படுகாயம்
ஓசூர்: தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட நொகனுார், தாவரக்கரை, ஆலஹள்ளி ஆகிய வனப்பகுதியில், 15க்கும் மேற்-பட்ட யானைகள் பல்வேறு குழுக்களாக முகாமிட்டுள்ளன. இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளி-யேறும் யானைகள், விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், தேன்கனிக்கோட்டை அடுத்த ஒட்டர்பாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலளி அனு-மய்யா, 44, என்பவர் நேற்று அதிகாலை வேலைக்காக தன் கிரா-மத்தில் இருந்து அந்தேவனப்பள்ளி கிராமத்திற்கு நடந்து சென்றார். ஆலஹள்ளி கிராமம் அருகே சென்ற போது, அங்கி-ருந்த ஒற்றை யானை, அவரை விரட்டி சென்று தாக்கி விட்டு, வனப்பகுதிக்கு சென்றது.அனுமய்யா அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்-பட்டார். தேன்கனிக்கோட்டை போலீசார் மற்றும் வனத்துறை-யினர் விசாரித்து வருகின்றனர்.
இந்தாண்டு யானைகளால் விவசாய பயிர்கள் சேதமாகி வரும் நிலையில், மனிதர்களையும் யானைகள் தாக்க துவங்கியுள்ளதால், வனப்பகுதியை ஒட்டிய கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். யானைகளை கர்நாடகா மாநிலத்திற்கு விரட்ட, கோரிக்கை விடுத்-துள்ளனர்.