காட்டுப் பன்றிகள் தொல்லை விவசாயிகள் வேதனை

காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பாப்பனத்தில் விளைச்சல் நேரத்தில் நெற் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

காரியாபட்டி பாப்பனம், முஷ்டக்குறிச்சி, வி. நாங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெல் விவசாயம் நடக்கிறது. இந்த ஆண்டு ஓரளவிற்கு மழை பெய்து கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் வந்தது.

இதனை நம்பி ஏராளமான விவசாயிகள் நெல் நடவு செய்தனர். நன்கு வளர்ந்து பால் பிடிக்கும் பருவத்தில் பயிர்கள் உள்ளன. இந்நிலையில் காட்டுப் பன்றிகள் வயல்களுக்குள் புகுந்து நெற்பயிர்களை சேதப்படுத்தியுள்ளன. ஏராளமான பணம் செலவு செய்து நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை இருப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

கண்ணன், விவசாயி: மூன்றாண்டுகளாக ஓரளவிற்கு மழை பெய்து கண்மாய்க்கு தண்ணீர் வந்தது. பால் பிடிக்கும் பருவத்தில் காட்டுப் பன்றிகள் புகுந்து நெற்பயிர்களை சேதப்படுத்திவிட்டன. காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement