வருமானவரி செலுத்த விலக்கு அளிக்க ஓய்வூதியர் கோரிக்கை

ராமநாதபுரம்: வருமானவரி செலுத்துவதில் இருந்து மத்திய, மாநில அரசுகள் விலக்கு அளிக்க வேண்டும் என ஓய்வூதியர்கள் வலியுறுத்தினர்.

ராமநாதபுரத்தில் மாவட்ட அனைத்து ஓய்வூதியர்கள், மூத்த குடிமக்கள் நலச்சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் நாகரத்தினம் முன்னிலை வகித்தார். அரசு தேர்தல் வாக்குறுதிப்படி வயது அடிப்படையில் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் ஓய்வூதியர்கள் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

சங்க கவுரவத் தலைவர் சேசுராஜ், பொருளாளர் முருகேசன், இணைச்செயலாளர் செங்குட்டுவன், துணைத் தலைவர் சீதாலட்சுமி, முன்னாள் பொருளாளர் குருசாமி, ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் சவுந்திரபாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement