கடல் நீர் மட்டம் தொண்டியில் திடீர் உயர்வு
தொண்டி: தொண்டியில் அதிகாலை கடல் நீர் மட்டம் திடீரென உயர்ந்ததால் மீனவர்கள் அச்சமடைந்தனர்.
தொண்டியில் நேற்று முன்தினம் அதிகாலை 1:00 மணிக்கு கடல் நீர் மட்டம் திடீரென உயர்ந்தது. கடற்கரை ஓரத்தில் புதுக்குடி பகுதியில் மீனவர் குடிசைகளின் ஓரத்திலும், மரைன் போலீஸ் ஸ்டேஷன் வாசல் வரை கடல் அலை வந்தது. எப்போதும் இல்லாத அளவிற்கு கடல் நீர் மட்டம் உயர்ந்ததால் மீனவர்கள் அச்சமடைந்தனர்.
மீனவர்கள் கூறியதாவது: அதிகாலை வழக்கம் போல் மீன்பிடிக்கச் சென்றோம். அப்போது கடல் நீர் 40 அடி துாரத்திற்கு கடற்கரையை ஒட்டி உயர்ந்து காணப்பட்டது. வழக்கத்தை விட கடல் நீர் மட்டம் உயர்ந்ததை பார்த்து அச்சமாக இருந்தது. நீண்ட நேரத்திற்கு பிறகு நீர் மட்டம் குறையத் துவங்கியது.
தொண்டி பகுதியில் அடிக்கடி கடல் உள் வாங்கும். ஆனால் இந்த அளவிற்கு நீர் மட்டம் உயர்ந்ததை பார்த்ததில்லை என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement