பயிர்காப்பீடு நீட்டிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி

திருவாடானை: பயிர் காப்பீடு தேதி நீட்டிக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திருவாடானை தாலுகாவில் 26 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி பணிகள் துவங்கியது. விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிர் மகசூல் இழப்புகளுக்கு உரிய காப்பீடு தொகை வழங்க வேளாண் காப்பீட்டு நிறுவனம் சார்பில் காப்பீட்டு திட்டம் அறிவிக்கப்பட்டது.

காப்பீடு செய்ய நவ.15 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. ஏராளமான விவசாயிகள் பல்வேறு காரணங்களால் காப்பீடு செய்ய முடியாமல் தவித்தனர். விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கவாஸ்கர் கூறியதாவது: நிலங்களில் களை எடுப்பு, உரமிடுதல் போன்ற பணிகள் நடக்கிறது. தீபாவளிக்கு தொடர் விடுமுறை என பல்வேறு காரணங்களால் விவசாயிகள் காப்பீடு செய்ய முடியவில்லை. ஆகவே நவ.30 வரை கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என்றார்.

இதுகுறித்த செய்தி தினமலர் நாளிதழில் நவ.11 ல் வெளியானது. இதன் எதிரொலியாக நவ.30 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement