'மேஸி பெர்குஷன்' டிராக்டர் வழக்கில் நீதிமன்றம் உத்தரவு
சென்னை:'மேஸி பெர்குஷன்' டிராக்டர் பிராண்டு தொடர்பான வழக்கில், சென்னையைச் சேர்ந்த 'டாபே' மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 'அக்கோ' ஆகிய இரு நிறுவனங்களும், நீதிமன்றம் தங்களுக்கு சாதகமாக உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.
டாபே உடன் தங்கள் நிறுவனத் தயாரிப்புகளின் விற்பனைக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டதாகக் கூறி, மேஸி பெர்குஷன் பிராண்டு பெயரை பயன்படுத்த டாபேவுக்கு தடை விதிக்கக் கோரி, அக்கோ நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
அக்கோ நிறுவனத்தில் 16.20% பங்கு வைத்துள்ள தங்களுக்கு, அந்த பிராண்டை பயன்படுத்த உரிமை உள்ளதாக, டாபே வாதிட்டது.
இதில், நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்காமல், இப்போதுள்ள நிலை நீடிக்கும் என்றதால், அது தங்களுக்கு சாதகமானது என டாபே தெரிவித்தது.
ஆனால், வணிக முத்திரை தொடர்பான தங்கள் நிறுவன வழக்கில், விதிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை, கடந்த நவம்பர் 18ல் சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியதால், மேஸி பெர்குஷன் பிராண்டு வணிக முத்திரையை பயன்படுத்த, டாபேவுக்கு அனுமதியில்லை என்றாகி விட்டதாக, அக்கோ நிறுவனத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
'டாபே, அக்கோ' இரு நிறுவனங்களும், தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக இருப்பதாக அறிவித்துள்ளன