ஏகனாபுரம் ஊராட்சி துணைத் தலைவி துாக்கிட்டு தற்கொலை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அடுத்த, கீரநல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி; விவசாயி மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

இவரது மனைவி திவ்யா,35, ஏகனாபுரம் ஊராட்சி துணைத் தலைவியாக பதவி வகித்து வந்தார். இவர்களுக்கு, மூன்று குழந்தைகள் உள்ளனர்.

பரந்துாரில் பசுமை விமான நிலையம் அமைவதற்கு, ஏகனாபுரம் கிராம போராட்ட குழுவில், அவர் முக்கிய பங்கு வகித்து வந்தார்.

ஏகனாபுரம் கிராமத்தில், விளை நிலம் கையகப்படுத்தும் விஷயத்தில், சில தினங்களாக மன உளைச்சலில் இருந்த வந்த திவ்யா, நேற்றுமுன்தினம் மாலையில், மனமுடைந்து, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சுங்குவார்சத்திரம் போலீசார் துாக்கிட்டு இறந்த திவ்யாவின் உடலை மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரிக்கின்றனர்.

Advertisement