காஞ்சியில் மின் ஊழியர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி வகுப்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மின்பகிர்மான வட்டம், வடக்கு கோட்டம் சார்பில், மின் ஊழியர்களுக்கான பாதுகாப்பு குறித்த, பயிற்சி வகுப்பு, காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டம், மேற்பார்வை பொறியாளர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது.

இதில், வடக்கு கோட்ட செயற்பொறியாளர் பாண்டியராஜன்., காஞ்சிபுரம் செயற் பொறியாளர் பிரசாத், காஞ்சிபுரம் நகர உதவி செயற்பொறியாளர் இளையராஜன், ஹரிதாஸ், உதவி பொறியாளர்கள் சோழராஜன், வெங்கடேசன், பாபு, சபரிநாத் உள்ளிட்ட அனைத்து இளநிலை பொறியாளர்கள். உள்ளிட்டோர் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் பாதுகாப்புடன் எவ்வாறு பணிபுரிவது, பாதுகாப்பு உபகரணங்களை எவ்வாறு பயன்படுத்துவது என, பயிற்சி அளித்தனர்.

மேலும், பணி செய்யும்போது, பயன்படுத்தப்படும் உபகரணங்கள் பாதுகாப்பான நிலையில் உள்ளதா என, அன்றாடம் சரி பார்த்துக் கொள்ள வேண்டும். தடைபட்ட மின்சாரத்தை சீராக்கும் பணியின்போது, தனியாக பணி செய்யாமல் மேற்பார்வையாளரின் துணையோடு செய்ய வேண்டும். மின்மாற்றி பராமரிப்பு, மின் தொடர்கள் பராமரிப்பு முதலிய அன்றாட வேலைகளை கையேட்டில் தவறாமல் குறிக்க வேண்டும்.

பணியின்போது விழிப்புடன் செயல்படவேண்டும் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் குறித்து எடுத்துரைத்தனர். இதில், 200க்கும் மேற்பட்ட களப்பணி மின் ஊழியர்கள் பங்கேற்றனர்.

Advertisement