20 கிலோ வெள்ளி, ரூ.5 லட்சத்துடன் தலைமறைவான ஊழியர் கைது
சென்னை:வெள்ளிப் பொருட்கள் விற்பனை கடையில், 20 கிலோ வெள்ளிப் பொருட்கள், 5 லட்சம் ரொக்கத்துடன் தலைமறைவான ஊழியரை, தனிப்படை போலீசார் பெங்களூருவில் நேற்று கைது செய்தனர்.
ஆழ்வார்பேட்டை, கோ-ஆப்ரேட்டிவ் காலனியைச் சேர்ந்தவர் தினேஷ், 43. ஆழ்வார்பேட்டை செனடாப், 2வது சந்தில் வெள்ளிப் பொருட்கள் விற்பனைக்கடை நடத்தி வருகிறார். அவரது கடையில், பெங்களூருவைச் சேர்ந்த பாபுலால், 40 என்பவர் வேலை செய்து வந்தார்.
அவர் திடீரென, கடை பெட்டக பூட்டை உடைத்து, 10 கிலோ வெள்ளிப் பொருட்கள், 5 லட்சம் ரொக்கம், அலுவலக இருசக்கர வாகனத்துடன் தலைமறைவானார்.
கடை உரிமையாளர் தினேஷ் தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்தார். கோடம்பாக்கம் ஆய்வாளர் அலெக்ஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தலைமறைவான ஊழியரின் மொபைல் போன் டவரை ஆய்வு செய்ததில், பெங்களூரில் உள்ள விடுதி ஒன்றில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து, 20 கிலோ வெள்ளி பொருட்கள், 4,80 லட்சம் ரொக்கம், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
புகார்தாரர் சினிமா நிறுவனங்களுக்கு பைனான்ஸ் செய்து வருவதும், நடிகர் விஜயை வைத்து திரைப்படம் ஒன்றை தயாரித்துள்ளார்.