ஸ்டான்லியில் உணவு தரம் 120க்கு 99 மதிப்பெண் வழங்கல்

ராயபுரம்,ராயபுரம் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், உள்நோயாளிகளுக்காக உணவு சமைத்து வழங்கும் சமையல் கூடத்தில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர்.

மேலும், மருத்துவமனை கேன்டீன்களில் ஆய்வு நடத்தி, நோயாளிகளின் உறவினர்களிடம் உணவுகள் தரம் குறித்து கேட்டறிந்தனர். கேன்டீன் உரிமையாளர்களிடம், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்த கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும், மருத்துவ மாணவர்களின் விடுதிகளிலும் ஆய்வு நடத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், உணவுகளின் தரம் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தனர்.

உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமார் கூறியதாவது:

அரசு மருத்துவமனைகளில் மருத்துவ மாணவர்களுக்கும், நோயாளிகளுக்கும் தரமான உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக, இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. தமிழகம் முழுதும் மருத்துவமனைகளில் இந்த ஆய்வு நடத்தப்படும்.

ஸ்டான்லி மருத்துவமனையில் நடந்த ஆய்வுக்கு பின் 120க்கு 99 மதிப்பெண்கள் வழங்கி உள்ளோம். ஸ்டான்லி மருத்துவமனையில் பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளிட்ட சிறிய குறைகள் மட்டுமே இருந்தன.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement