கோவில் உண்டியலை உடைத்து கைவரிசை

ஓட்டேரி, ஓட்டேரி அருகே நம்மாழ்வார்பேட்டை ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர், வி.ஹேமராஜ், 26. கட்டட வேலையில் உள்ள இவர், தன் வீட்டின்கீழ் பாம்பன் சாமி என்ற கோவிலை கட்டி, ஐந்து ஆண்டுகளாக பூஜித்து வருகிறார்.

கோவில் உண்டியலில் சேரும் பணத்தை, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை எடுத்து அன்னதானம் செய்து வருகிறார்.

நேற்று காலை வழக்கம்போல கோவிலுக்கு சென்றபோது, உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. 'சிசிடிவி' கேமராவை பார்த்தபோது, அதிகாலை 3:45 மணியளவில், கோவிலின் பூட்டை இருவர் உடைத்து, உண்டியல் பணத்தை திருடிச் செல்வது தெரிந்தது.

இதுகுறித்து, தலைமைச் செயலக காலனி போலீசில் ஹேமராஜ் புகார் அளித்துள்ளார். புகாரில், உண்டியலில் 15,000 ரூபாய் வரை பணம் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement