ஐக்கிய விவசாயிகள் நகல் எரிப்பு போராட்டம்

கடலுார்; கடலுாரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நகல் எரிப்பு போராட்டம் நடந்தது.

வேளாண் சந்தைப்படுத்துதல் கொள்கை தி்ட்டத்தை ரத்து செய்யக் கோரி ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் கடலுார், திருப்பாதிரிப்புலியூர் ஜவான்ஸ் பவன் அருகில் நகல் எரிப்பு போராட்டம் நடந்தது.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ., மாவட்டத் தலைவர் கருப்பையன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ், விவசாய சங்க மாவட்ட துணைத் தலைவர் தட்சிணாமூர்த்தி, மா.கம்யூ. மாநகர செயலாளர் அமர்நாத் கண்டன உரையாற்றினர்.பின், நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அனுப்பி வைத்தனர்.

Advertisement