கேரளா, பீஹார், மணிப்பூர், ஒடிசா,மிசோரம் மாநில கவர்னர்கள் மாற்றம்

10

புதுடில்லி: கேரள, பீஹார், மிசோரம் மாநில கவர்னர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். மணிப்பூர், ஒடிசா மாநிலங்களுக்கு புது கவர்னர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். முன்னாள் மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா மணிப்பூர் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: ஒடிசா கவர்னராக இருந்த ரகுபர் தாசின் ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார்.

கேரள கவர்னராக இருந்த ஆரிப் முகமது கான்- பீஹார் கவர்னராகவும்,

பீஹார் கவர்னராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் -கேரள கவர்னராகவும்

மிசோரம் கவர்னராக இருந்த ஹரி பாபு கம்பம்பதி- ஒடிசா கவர்னராகவும் மாற்றப்பட்டு உள்ளனர்.

மிசோரம் கவர்னராக முன்னாள் மத்திய அமைச்சர் விஜய் குமார் சிங்கும்

மணிப்பூர் கவர்னராக முன்னாள் உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லாவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement