மீனாட்சி அம்மன் கோவில் காலண்டர்கள் 'பதுக்கல்': பக்தர்கள் தவிப்பு
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருவிழாக்கள், முக்கிய நிகழ்வுகள் அடங்கிய காலண்டர்கள் பக்தர்களுக்கு விற்கப்படாமல் 'பதுக்கி' வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இக்கோயிலில் மாதந்தோறும் நடக்கும் திருவிழாக்கள், பிரதோஷம், கொடியேற்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் குறித்தும் பக்தர்கள் அறியும் வகையில் மாத காலண்டர் ஆண்டுதோறும் விற்கப்படுகின்றன. இந்தாண்டும் ரூ.100க்கு விற்கப்படும் என சில வாரங்களுக்கு முன் கோவில் நிர்வாகம் அறிவித்தது.
அம்மன், சுவாமியின் அலங்கார படங்களுடன் கிடைக்கும் இக்காலண்டரை பெற பக்தர்கள் வெளியூர்களில் இருந்து கூட வருகின்றனர். தற்போது காலண்டர் விற்பனை நடக்கவில்லை. ஸ்டால்களில் கேட்டால் விற்று தீர்ந்துவிட்டதாகவும், இனி அடுத்தாண்டுதான் கிடைக்கும் எனக்கூறுகின்றனர். புத்தாண்டு அன்று வி.ஐ.பி.,க்களுக்கு வழங்குவதற்காக குறிப்பிட்ட எண்ணிக்கையில் காலண்டர்கள் பதுக்கி வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
கோவில் தரப்பில் கேட்டபோது, 'அச்சடித்த காலண்டர்கள் தீர்ந்துவிட்டன. புத்தாண்டு சமயத்தில் 250 காலண்டர்கள் விற்கப்படும்' என்றனர். காலண்டர்களை தட்டுப்பாடின்றி பக்தர்களுக்கு விற்பதால் நிர்வாகத்திற்கு வருவாய் கிடைக்குமே. குறைந்த எண்ணிக்கையில் அச்சடித்து செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்குகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இதுபோல் நடக்கிறது என்கின்றனர் பக்தர்கள்.
வாசகர் கருத்து (14)
jayvee - chennai,இந்தியா
25 டிச,2024 - 18:28 Report Abuse
கோவிலின் பரம்பரை பாதுகாவலர் என்று பீற்ற்றிக்கொள்ளும் PTR வாய்திறப்பாரா ? இல்லை மீனாட்சிஅம்மன் கோவில் செலவில் கிருத்துவ காலண்டர்கள் அச்சடிக்கப்பட்டதா ?
0
0
Reply
Sampath Kumar - chennai,இந்தியா
25 டிச,2024 - 17:24 Report Abuse
கடவுள் நம்பிக்கை இல்லாத கயவர்கள் தான் கருவரையில் உள்ளார்கள் ஒரு ம்பவம் தஞ்சாவூரில் நடைபெற்றது ஒரு பக்தேர் ஒரு அர்ச்சகரிடம் கேக்கின்றார் ஏன் சாமி துப்பு செய்தல் இ கண்ணை குத்துமே என்று இல்லடா அம்பி நான் கூட நம்பி இருந்தேன் அனல் பாரு ஒரு நாள் ஆத்துகாரி சாமி கட்டி உள்ள புடவை நல்ல ருக்கு நேக்கும் வாங்கி கொடு என்று நான் பார்தேன் அந்த புடவை சிலைகளில் அரை போய்விடும் அதுனால அதை ஏடு து அது காருக்கு கொடுத்தான் மி ஒன்னும் ஏன் கண்ணை கொத்தவில்லை என்ற பிப்டி ஏ புடவை நகை தங்கம் என்று ஏடுத்து கொடுத்தான் என்று சொல்லி இருக்கிறார் என்றால் ஏங்கே தப்பு உள்ளது என்பதை பக்கத்தை டிகள் தயவு செய்து புரிந்து கோலா வேண்டும் இது நடந்த உண்ணாமை சம்பவம் இது சங்கி கேலிக்கு புரியாது உடனே பொங்கி எள்ளுவார்கள் ஏழு வா நான் ப்ரொய்வே பண்ணுகிறான் அப்போ உன் முகத்தை ஏங்கே வாய்ப்பை பார்க்கலாம் வாடா
0
0
Reply
பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி - கோவன்புத்தூர்,இந்தியா
25 டிச,2024 - 13:58 Report Abuse
அறநிலையத்துறை மீனாட்சி அம்மன் கோவில் டைரி தயாரித்து கூட விற்கலாம். இறைவனையே வியாபாரப் பொருளாகி விட்டது திராவிடர்கள் ஆட்சியில். கோயில்களுக்குள்ளே மால் போல் கடைகள். கோயில்கள் முன்பு கடைவீதி போல் கடைகள். கோயில்கள் என்ன வியாபார ஸ்தலமா. இந்த லட்சணத்தில் சங்கிகள் என்ற பெயர் இவர்களை செய்யும் இந்த அநியாய செயல்களை கேள்வி கேட்டால்.
0
0
Reply
V வைகுண்டேஸ்வரன் - Chennai,இந்தியா
25 டிச,2024 - 13:18 Report Abuse
இந்த காலத்தில் கூட காசு கொடுத்து காலண்டர் வாங்குகிறார்களா? Strange
0
0
ghee - ,
25 டிச,2024 - 16:30Report Abuse
funny guy....need to learn more..... but what to do with dravida brains remains same...
0
0
Reply
Tamilan - ,
25 டிச,2024 - 13:02 Report Abuse
like TTD, they can also sell these calenders through online sale. many people will buy and ultimately temple management will earn revenue. But one thing with dravida model in place, these things are not at all possible. hopeless.
0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
25 டிச,2024 - 12:19 Report Abuse
பூனை கண்ணை மூடிக்கொண்டால் ....
0
0
Reply
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
25 டிச,2024 - 11:16 Report Abuse
ஏன் தனியார் இந்த காலெண்டர்களை தயாரித்து ஐம்பது ரூபாய்க்கு விற்றால் என்ன?
0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
25 டிச,2024 - 10:39 Report Abuse
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கோவிலை நிர்வகித்தால் இப்படித்தான் வர்த்தக ஸ்தாபனம் போல நடத்துவார்கள்.
0
0
Admission Incharge Sir - ,இந்தியா
25 டிச,2024 - 11:37Report Abuse
மிக சரியாக கூறினீர்கள்
0
0
Reply
அப்பாவி - ,
25 டிச,2024 - 10:26 Report Abuse
கொஞ்சநாள் பொறுங்க. காலண்டரை படம் பிடித்து PDF ஆக இணையத்தில் போடுவார்கள். பதிவிறக்கம் ஃபோனிலேயேசெய்து கொள்ளலாம்.
0
0
Reply
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
25 டிச,2024 - 10:21 Report Abuse
நாட்டில் அணைத்து பிரச்சனைக்கும் ஒன்றிய அரசுதான் காரணம் என்று சொல்லும் மதுரை பாராளுமன்றம் இந்த விஷயத்துக்கு எல்லாம் மத சார்பின்மையாக வாய் திறக்க மாட்டான் ...
0
0
Reply
மேலும் 2 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement