கோவை லாட்டரி வியாபாரியிடம் ரூ.2.25 கோடி சிக்கியது!

7

கோவை: கோவையைச் சேர்ந்த லாட்டரி வியாபாரியிடம் 2.25 கோடி ரூபாயை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, பாலாஜி நகரின் சென்னியாண்டவர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ்(42). திருமணமாகவில்லை. தாயாருடன் வசித்து இவர், கேரளாவில் லாட்டரிக் கடையில் காசாளராக பணியாற்றி வந்துள்ளார்.


இந்நிலையில், கோவையில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்பவர்களை பிடிக்கும்படி மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதற்காக எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதனடிப்படையில், பொள்ளாச்சி,வால்பாறை, அன்னூர் மற்றும் கருமத்தம்பட்டி உள்ளிட்ட 30 இடங்களில் சோதனை நடத்தினர்.


இச்சோதனையில், ரூ.2.5 கோடி ரொக்கம், தடை செய்யப்பட்ட கேரள லாட்டரிகள் 1,900 பறிமுதல் செய்யப்பட்டன. ரொக்கப்பணத்தில் ரூ.2 லட்சம் அளவுக்கு 2 ஆயிரம் நோட்டுக்கட்டுகள் இருந்தன. இதனையடுத்து நாகராஜை போலீசார் கைது செய்தனர்.
நாகராஜிடம் நடத்திய விசாரணையில், லாட்டரிக்கடையில் காசாளராக பணியாற்றுவதுடன் இல்லாமல், கோவை மற்றும் திருப்பூரில் தடை செய்யப்பட்ட லாட்டரிகளை அவர் விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் அவினாசி மற்றும் கருமத்தம்பட்டி போலீஸ் ஸ்டேசனில் தலா 3 வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளது.

Advertisement