நேருக்கு நேர் மோதிய பைக் மாதவரத்தில் ஒருவர் பலி

மாதவரம், மாதவரம் பால்பண்ணை முதல் யூனிட்டில் வசித்தவர் மணிகண்டன், 34; கொத்தனார்.

நேற்று முன்தினம் பைக்கில் மாதவரம் பால்பண்ணை சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிர்திசையில் மற்றொரு பைக்கில் வந்த வாலிபர், மணிகண்டன் ஓட்டி வந்த பைக்கோடு நேருக்கு நேர் மோதினார்.

பலத்த காயமடைந்த மணிகண்டன், ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் பலியானார்.

மற்றொரு பைக்கை ஓட்டி வந்த மணலி பிரவீன்குமார், 19, காயங்களுடன் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

Advertisement