வெவ்வேறு விபத்தில் இருவர் பலி
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரப்பள்ளி அருகே, பெத்தனப்பள்ளியை சேர்ந்தவர் நாராயணப்பா மனைவி லட்சுமியம்மா, 70. நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு, ஓசூர் - பெங்களூரு சாலையில் நடந்து சென்றார். அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்தார். ஓசூர் சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.
சூளகிரி அடுத்த ஒட்டர்பாளையத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 17. சூளகிரி அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று மாலை, 5:30 மணிக்கு, சூளகிரி மீனாட்சி திருமண மஹால் பகுதியில், ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கை ஓட்டி சென்றார். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் மோதியதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் சென்ற வேலு, 24, என்பவர் படுகாயமடைந்தார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement