புகார் பெட்டி : பருத்திப்பட்டு - திருவேற்காடு மோசமான சாலையால் அவதி

பருத்திப்பட்டு - திருவேற்காடு மோசமான சாலையால் அவதி



திருவேற்காடு, சுந்தரசோழபுரம், பருத்திப்பட்டு உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் பருத்திப்பட்டு -- திருவேற்காடு பிரதான சாலை, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

இச்சாலையில் மின் விளக்குகள் இருந்தும் பயனில்லாமல் இருப்பதால், விபத்து, வழிப்பறி அச்சம் நிலவுகிறது. பருத்திப்பட்டு -- திருவேற்காடு சாலையை ஒட்டி, தனியார் பள்ளி, கல்லுாரிகள் அமைந்துள்ளதால், தினமும் 5,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

'பிக் ஹவர்ஸ்' நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், வாகன ஓட்டிகளை எரிச்சல் அடைய செய்துள்ளது. எனவே, பருத்திப்பட்டு -- திருவேற்காடு சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைத்து, மின்விளக்குகள் முறையாக பராமரிக்க வேண்டும்.

-ராதாகிருஷ்ணன், திருவேற்காடு

Advertisement