திரு.வி.க., நகர் மண்டலத்தில் வளர்ச்சி பணிகள் புறக்கணிப்பு

பெரம்பூர், திரு.வி.க., நகர் மண்டலம் 71வது வார்டுக்குட்பட்ட வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே போலேரி அம்மன் கோவில் தெருவில், மாநகராட்சிக்கு சொந்தமான திறந்த வெளி இடம் உள்ளது.

இங்கு 'ஸ்மார்ட்' சிட்டி திட்டத்தின் கீழ், 53 லட்ச ரூபாயில், கால்பந்து விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி துவங்கியது.

தற்போது பணி முடிந்து மைதானம் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இந்நிலையில் மைதானத்தில் வலை அமைக்காமல் பணி முடிந்து விட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். கால்பந்து மைதானமாக அல்லாமல், திறந்தவெளி மைதானமாகவே திறக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

அதே போல் இப்பகுதிக்குட்பட்ட செங்கன் தெருவில், உடற்பயிற்சி கூடத்திற்கும் நிதி ஒதுக்கப்படாமல் உள்ளது.

இப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:

கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கால்பந்து மைதானம் கோரி வந்தோம்.

தற்போது பணி முடிந்த நிலையில் வலை அமைக்காமலேயே மைதானத்தை திறக்க உள்ளனர். தொகுதி எம்.எல்.ஏ.,வான தி.மு.க.,வை சேர்ந்த தாயகம் கவியும் கண்டு கொள்வதே இல்லை. உடற்பயிற்சி கூடம், பொது கழிப்பறை, ரேஷன் கடை என, எந்த வளர்ச்சிக்கும் தொகுதி நிதி ஒதுக்குவதில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement