புழல் சிறையில் மொபைல் பறிமுதல்
புழல், புழல் சிறையில், சமீபகாலமாக சிறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை, கைதிகள் மிரட்டும் சம்பவம் அதிகரித்து வருகிறது. அதனால், சிறை கண்காணிப்பில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று பக்ருதீன் மற்றும் கஞ்சா வழக்கில் அடைக்கப்பட்டுள்ள ரவிகுமார் ஆகியோர் அடைக்கப்பட்டுள்ள சிறை அறையின் பின்னால், மொபைல் போன் புதைத்து வைக்கப்பட்டிருந்தது.
அதை பறிமுதல் செய்த போலீசார், சிறை அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து புழல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement