பளுதுாக்குதல்: மார்டினா 'வெள்ளி'

தோகா: ஆசிய ஜூனியர் பளுதுாக்குதலில் இந்தியாவின் மார்டினா தேவி வெள்ளி வென்றார்.
கத்தார் தலைநகர் தோகாவில், ஆசிய ஜூனியர் பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்கள் ஜூனியர் +87 கிலோ பிரிவில் மணிப்பூரை சேர்ந்த மார்டினா தேவி 18, பங்கேற்றார்.
'ஸ்னாட்ச்' பிரிவில் 96, 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் 129 என, ஒட்டுமொத்தமாக 225 கிலோ பளுதுாக்கிய மார்டினா தேவி, 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.
தவிர இவர், 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் வெள்ளி, 'ஸ்னாட்ச்' பிரிவில் வெண்கலப்பதக்கத்தை பெற்றார். இந்த ஆண்டு நடந்த ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் அசத்திய மார்டினா, 'ஸ்னாட்ச்' பிரிவில் 101 கிலோ, 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் 136 கிலோ பளுதுாக்கி தேசிய சாதனை படைத்திருந்தார்.

Advertisement