நடவடிக்கை எடுக்க ஒருவரும் தயாராக இல்லை: கெஜ்ரிவால்
புதுடில்லி: தேர்தல் கமிஷன், அமலாக்கத்துறை, சிபிஐ, போலீஸ் போன்ற அமைப்புகள் உதவியற்றவர்களாக உள்ளன எனவும், எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை,'' என டில்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
நிருபர்களை சந்தித்த கெஜ்ரிவால் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ., ஏதாவது நல்லது செய்துஇருந்தால் , டில்லியில் ஓட்டுக்கு ரூ.1,100 கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்காது. அவர்கள் ஒன்றும் செய்யவில்லை. மாறாக என்னை விமர்சனம் செய்வதில் மட்டுமே குறியாகஇருந்தனர். தற்போது, ஓட்டுக்களை விலை கொடுத்து வாங்க முயற்சி செய்கின்றனர். இது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து. தேர்தல் கமிஷன், அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை அனைத்தும் உதவியற்ற அமைப்புகளாக உள்ளன. விசாரணை அமைப்புகள் நடவடிக்கை எடுப்பது கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.
டில்லி முதல்வர் அதிஷி கூறுகையில், கெஜ்ரிவால் போட்டியிடும் புதுடில்லி சட்டசபை தொகுதியில் வாக்காளர் அடையாள அட்டையை சரிபார்த்து பா.ஜ., பணம் கொடுத்து வருகிறது. அக்கட்சியின் பர்வேஷ் வர்மா, பணம் கொடுக்கும் போது, கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர். சேரி பகுதிகளில் வசிக்கும் பகுதிகளை வீட்டிற்கு வரவழைத்து கவர்களில் ரூ.1,100 வைத்து கொடுத்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.