சொன்னதை செய்த வாஜ்பாயி!
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயி
ஜார்க்கண்டை தனி மாநிலமாக அறிவிக்காமல் இருந்திருந்தால், இன்னும் நாம்
போராட வேண்டிய நிலையே ஏற்பட்டிருக்கும். கொடுத்த வாக்குறுதியின்படி,
ஜார்க்கண்ட் மாநிலத்தை உருவாக்கிய வாஜ்பாயி, பல வளர்ச்சி திட்டங்களை
துவங்கினார்.
சம்பாய் சோரன்
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர்,
பா.ஜ.,
வெட்கம் இல்லை!
அரசியல் ஆதாயங்களுக்காக மட்டுமே அம்பேத்கரின் பெயரை காங்., பயன்படுத்தி வருகிறது. மத்தியில் பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அக்கட்சி, அவரது பெயரில் ஒரு திட்டத்தை கூட துவங்கவில்லை. காங்கிரசுக்கு துளி கூட வெட்கம் இல்லை.
ஹிமந்த பிஸ்வ சர்மா
அசாம் முதல்வர்,
பா.ஜ.,
மோசடி மன்னன்!
லோக்பால் பெயரை சொல்லி டில்லியில், 10 ஆண்டுக்கு முன் ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி, அதை இப்போது மறந்துவிட்டனர். பஞ்சாபிலும் லோக்பால் கொண்டு வராதது ஏன்? அரவிந்த் கெஜ்ரிவால் மோசடி மன்னன். அவருடன் கூட்டணி வைத்தது தவறு.
அஜய் மாகன்
தேசிய பொருளாளர்,
காங்கிரஸ்